Latestமலேசியா

புத்ராஜெயாவில் 10,000 பேருடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற Skechers ஓட்டப்பந்தயம்; பங்கேற்பாளர்கள் 25% உயர்வு

புத்ராஜெயா, ஜூன்-29-புத்ராஜெயா, Anjung Floria வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற 9-ஆவது ‘Skechers நட்புமுறை நடை மற்றும் ஓட்டப் போட்டி 2026’ நிகழ்வில், கடந்த ஆண்டைவிட 25 விழுக்காடு கூடுதலாக மொத்தம் 10,000 பேர் பங்கேற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

 

 

 

 

 

இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாக 21 கிலோ மீட்டர் ‘பாதி மரத்தோன்’ (Half Marathon) பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டதாக Skechers தென்கிழக்காசியாவின் நிர்வாக இயக்குனர் Zann Lee தெரிவித்தார்.

இந்த 21 கிலோமீட்டர் பொதுப் பிரிவில் Mohamad Nur Radzman மற்றும் Chew Jia Qi ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மேலும், 10 கிலோ மீட்டர் பிரிவில் பிரபுதாஸ் கிருஷ்ணன் மற்றும் Nurul Juliana Shakira ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர்.

உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இந்த நிகழ்வின் வழி மலேசிய தேசிய புற்றுநோய் மன்றத்திற்கு (MAKNA) 10,000 வெள்ளி நிதியுதவியைக் Skechers நிறுவனம் வழங்கி சமூகக் கடமையாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!