
ஏதன்ஸ், ஜூலை-11-கிரீஸ் நாட்டுக்குச் சென்ற Ryanair விமானம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், விமானத்தின் ஜன்னல் கழன்றதால் பயணி ஒருவர் வெளியே இழுக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டது.
வட மாசிடோனியாவின் வான்வெளியில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜன்னல் கழன்றதால், இருக்கையிலிருந்த பயணி ஒருவர் கிட்டத்தட்ட பாதி உடல் வெளியே இழுக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அதிர்ஷ்டவசமாக, அந்தப் பயணி இருக்கை பாதுகாப்பு வார்ப்பட்டை அணிந்திருந்ததால் அவர் விமானத்திற்குள் சிக்கிக்கொண்டார்.
அருகிலிருந்த சக பயணிகள் உடனடியாக அவரைப் பத்திரமாக உள்ளே இழுத்து மீட்டனர்.
இந்த விபத்தில் அந்தப் பயணி உராய்வினால் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு ஆளானாலும், மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதுடன், பயணிகளை அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.



