Latestமலேசியா

2026–2030 வரை தொடரும் PERKESO–SWRC மூலோபாய ஒத்துழைப்பு; புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-பெர்கேஸோ (PERKESO) மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையமான SWRC இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு, 2026 முதல் 2030 வரையிலான காலக்கட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு சூழல் அமைப்பானது தொழிலாளர் சந்தையின் மாற்றங்கள், மக்கள் தொகை சார்ந்த அழுத்தங்கள், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என பெர்கேஸோ வாரியத் தலைவர் Dato’ Sri Subahan Kamal தெரிவித்திருக்கிறார்.

சமூகப் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு கொள்கையும் நடப்புத் தரவுகள், கணிப்புகள், அறிவியல் ஆராய்ச்சி சான்றுகள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கல்வி நிறுவனங்களுடனான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் இந்த அணுகுமுறையைச் செயல்படுத்த முடியும். இது தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இலக்கு வைக்கப்பட்ட தரப்புகளுக்கு பயனளிப்பதை உறுதி செய்யும்.

அவ்வகையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையமான SWRCயுடன் பெர்கேஸோ புதுப்பித்துள்ள மூலோபாய ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, கொள்கை மேம்பாடு, திறன் உருவாக்கம் மற்றும் ஆதரவு ஆகிய மூன்று முக்கிய உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என அவர் விளக்கினார்.

பெர்கேஸோ மற்றும் SWRC இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் Subahan Kamal அவ்வாறு குறிப்பிட்டார்.

2026 முதல் 2030 வரையிலான இந்த ஒத்துழைப்பு மக்களின் உண்மையான தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மேலும் முற்போக்கான சமூகப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் என்றாரவர்.

இவ்வேளையில், இந்த ஒத்துழைப்பு, முதுமை சமூகம், தொழிலாளர் சந்தை மாற்றங்கள், மாற்றுத்திறனாளிகள் நிர்வாகம், வறுமை மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு மீதான பல்வேறு சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை உருவாக்குவதில் பங்களிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் SWRC இயக்குனர் Datuk Norma Mansor தெரிவித்தார்.

அந்நிகழ்வில் மலாயா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் வாரியத் தலைவர் Tan Sri Zarinah Anwar, பெர்கேஸோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Dato Sri Dr. Muhammad Azman Aziz Mohammed, மலாயா பல்கலைக்கழத் துணை வேந்தர் Dato Seri Dr Noor Azuan Abu Osman ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!