Latestஉலகம்மலேசியா

சீனாவிலிருந்து காய்கறி இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு – மொஹமட் சாபு

சீனா, அக்டோபர் 5 – சீனாவிலிருந்து குறைந்த விலையில் காய்கறிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, காய்கறி இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

உள்ளூர் காய்கறிகளைவிட சீனக் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்படுவதால், உள்ளூர் விவசாயிகளின் விற்பனை மற்றும் வருமானம் பாதிக்கப்படுவதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் சாபு (Mohamad Sabu) தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு மலேசியாவின் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மதிப்பு 90 பில்லியன் ரிங்கிட்டை தாண்டியதாக கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ பூய் தியோங் (Khoo Poay Tiong) கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், இளைஞர்களை விவசாயத் துறையில் ஈடுபடச் செய்யவும், மத்திய அரசு பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து இளம் விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!