Latestமலேசியா

ஜோகூர் மக்களே, கொண்டாடத் தயாரா? அக்.10-ல் வணக்கம் மலேசியாவின் ‘ஒற்றுமை ஒளிரும் தீபாவளி’!

ஜோகூர் பாரு, அக்- 05 —தீபாவளி ஷாப்பிங்குடன் இசை, நடனம், போட்டிகள் எனக் குடும்பத்துடன் கொண்டாடத் தயாராகுங்கள்! வணக்கம் மலேசியாவின் ‘ஒற்றுமை ஒளிரும் தீபாவளி’ நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஜோகூர் பாருவிலுள்ள Sutera Mall-இல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இரண்டாவது முறையாக வணக்கம் மலேசியா நடத்தும் இந்தக் கார்னிவல், ஜோகூர் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்புக் கொண்டாட்டமாக அமையவுள்ளது. Colours of India ஏற்பாட்டில் அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் ‘Southeast Asia Deepavali Festival & Trade Expo 2026’-இன் முக்கிய அங்கமாக இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

உள்ளூர் கலைஞர்களான Pycomanthra, AG Paranjothy மற்றும் MC Raj ஆகியோரின் பாடல் படைப்புகள், வண்ணமயமான நடனங்கள் என மேடையைக் களைகட்ட வைக்கும் கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. பார்வையாளர்களும் உற்சாகமாகப் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குக் கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தீபாவளிக்கான ஆடை அலங்காரப் பொருட்களை வாங்குவதோடு, பாரம்பரிய உணவுகளைச் சுவைத்து, கலைநிகழ்ச்சிகளை ரசித்து மகிழவும் இந்த விழா வாய்ப்பளிக்கிறது. ஒரே இடத்தில் ஷாப்பிங்கும் பொழுதுபோக்கும் இணையும் இக்கொண்டாட்டம், குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி மகிழும் அனுபவமாக அமையவுள்ளது.

அன்றைய தினம் வணக்கம் மலேசியா குழுவினரும் மக்களை நேரில் சந்திக்கவுள்ளனர். மேலும், அங்கு அமைக்கப்படும் வணக்கம் மலேசியாவின் தகவல் மையத்தில், அதன் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களைப் பார்வையாளர்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

‘10 Festivals Under One Roof’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த ஐந்து நாள் கண்காட்சி, ஆன்மிகம், ஆடை அலங்காரம், பாரம்பரிய உணவு, கலை, கலாச்சாரம் மற்றும் வணிகம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. இக்கொண்டாட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள Colours of India நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜோகூர் மக்களே, நாங்கள் தயார்… நீங்கள் தயாரா? அக்டோபர் 10ஆம் தேதி Sutera Mall-இல் சந்திப்போம்! வணக்கம் மலேசியாவுடன் இணைந்து, ஒற்றுமை ஒளிரும் தீபாவளியைக் கொண்டாடுவோம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!