Latestஇந்தியாஉலகம்

Starlink விவகாரம்: அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா? Mask கேள்வி

புதுடில்லி, அக்-09-இந்தியாவில் Starlink செயற்கைக்கோள் இணையச் சேவைக்கு உள்நாட்டு வணிகத் தரப்புகள் தடையாக இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், “இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானிதானா?” என SpaceX தலைமை நிர்வாக அதிகாரி Elon Mask கேள்வி எழுப்பியுள்ளார்.

Starlink சேவைகள் தடுக்கப்படுவதாக Mask முன்வைத்த குற்றச்சாட்டுகளை முன்னதாக இந்தியத் தொலைத்தொடர்புத் துறை நிராகரித்திருந்தது. நாட்டில் செயற்கைக்கோள் இணையச் சேவை வழங்குவதற்கான உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்வது அவசியம் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் அவ்விளக்கம் வெளியான சில மணி நேரங்களுக்குள், Musk தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானிதானா?” என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வேளையில், மணிப்பூரில் தீவிரவாதிகள் Starlink சேவையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் Musk மறுத்தார். இந்தியாவில் தனது நிறுவனத்தின் செயற்கைக்கோள் சேவை செயல்படுத்தப்படாததால், அங்கு அதைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு நிலவரத்தில், Starlinkகின் போட்டி நிறுவனமான OneWebப்பை ஆதரிக்கும் Bharti Airtel குழுமத் தலைவர் Sunil Mittal, தங்கள் நிறுவனமும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். Jio Platforms நிர்வாக இயக்குநர் Akash Ambani, Muskக்கின் கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக Starlink பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. செயற்கைக்கோள் இணையச் சேவைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஒப்புதல்களைப் பெற நிறுவனங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், இந்தச் சர்ச்சை இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!