Latestமலேசியா

மலாக்காவில் நிலத்தடி கேபிள்களைத் திருட முயன்ற கும்பல்; போலீஸ் துரத்திய போதிலும் தப்பியோட்டம்

அலோர் காஜா, நவம்பர்-22 – மலாக்கா, அலோர் காஜா, தாமான் மாலிம் ஜெயாவில் நிலத்தடி கேபிள்களைத் திருட முயன்ற கும்பலைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று காலை 6.05 மணியளவில், நிலத்தடி கேபிள்கள் அமைந்துள்ள குழியின் மூடியைச் சிலர் திறப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது, சந்தேக நபர்கள் கரு நீல நிற Proton S70 மற்றும் வெள்ளை நிற Toyota Hilux வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

போலீஸார் அவர்களை மாலிம் ஜெயாவிலிருந்து Taman Malim Jaya, Batu Berendam, Krubong மற்றும் Cheng வழியாக அலோர் காஜாவின் ரும்பியா வரை துரத்தினர்.

எனினும், இரு வாகனங்களும் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பின.

சந்தேக நபர்கள் நிலத்தடி கேபிள்களை வெட்டுவதற்கு முன்பே தப்பியதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடருகிறது.

பொது மக்கள் தகவல் வழங்குமாறும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!