Latestமலேசியா

கெடாவில் ஆடவர் 16 முறை சரமாரியாக வெட்டிக் கொலை; 4 சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கெடா, நவம்பர் 26 – கெடா, பாலிங், குவாலா கெத்திலில் நள்ளிரவில் நால்வர் கொண்ட கும்பலால் 16 முறை சரமாரியாக வெட்டப்பட்ட ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் ஜாலான் ராயா பெக்கான் லாமாவிலுள்ள உணவகத்தின் முன்புறம் நிகழ்ந்தது.

புரோட்டோன் பெர்சோனா காரில் வந்த நால்வர், பாராங்கத்திகளுடன் இறங்கி, ஆடவரைத் துரத்திச் சென்று தாக்கியதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் கால்கள், கைகள், முழங்கால்கள் மற்றும் கழுத்தின் பின்பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக கெடா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா (Datuk Adzli Abu Shah) தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பழிவாங்கும் நோக்கம் மற்றும் பகுதிக்கான ஆதிக்கப் போட்டியே இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

சம்பவத்தில் தொடர்புடைய நால்வரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!