Latestமலேசியா

லண்டன் பாணியிலான வறுத்த வாத்து உணவுகளுடன் கோலாலம்பூரில் ‘Oh My Duck!’ உணவகம் திறப்பு

கோலாலம்பூர், நவ.27-கோலாலம்பூர் Ombak KLCC வணிக வளாகத்தில் Oh My Duck! உணவகம் அதிகாரப்பூர்வமாகத் திரைப்படம் விழா கண்டுள்ளது. லண்டனில் உள்ள பாரம்பரிய வறுத்த வாத்து உணவகங்களின் உணவு வகைகளையும், நட்பான சூழலையும் மலேசியாவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

இணை நிறுவனர்களான Gary and Qaysசின் நல்ல உணவின் மீதான ஆர்வமும், லண்டனில் அவர்கள் வாழ்ந்த அனுபவமும் இந்த உணவகத்தைத் தொடங்குவதற்கான உந்துதலாக அமைந்தன. அவர்களுடன் இயக்குநர்களான Rizka Sarunia, Luciana Pamela மற்றும் Milla Algamar ஆகியோரும் தங்களது சந்தைப்படுத்தல், ஊடகம் மற்றும் வணிக அனுபவங்களை ஒன்றிணைத்து இம்முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறுவதற்காக சமூக ஊடகங்கள், வாய்வழிப் பரிந்துரைகள் மற்றும் உணவு விநியோகச் செயலிகள் வழியாகவும் உணவகத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது. உணவகத் திறப்பு விழாவில் Tengku Razaleigh, Che Puan Alfia Reziani, Tengku Mohamed Rizam உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உணவகத்தில் வறுத்த வாத்து இறைச்சியுடன் அடர்த்தியான கருப்பு சாஸ் சேர்த்து சாதம் அல்லது நூடுல்ஸுடன் பரிமாறப்படுகிறது. மேலும், Smoked Duck Lumpia, Butter Squid, Duck Bee Hoon உள்ளிட்ட உணவு வகைகளும் இங்கு பரிமாறப்படுகிறது.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வகையில் ஹலால் உணவுகளை வழங்குவதே உணவகத்தின் நோக்கமாகும். அதிகாரப்பூர்வ ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஹலால் மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், சான்றளிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பொருட்கள் பெறப்படுவதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த உணவகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!