Latestஇந்தியாஉலகம்

BJPயை முறியடித்த கரப்பான்பூச்சி இயக்கம்; 5 நாட்களில் 11 மில்லியன் இன்ஸ்டகிராம் பின்தொடர்பாளர்களைக் குவித்து சாதனை

புது டெல்லி, மே-21-இந்தியாவில் இணையவாசிகளால் வேடிக்கையாகத் தொடங்கப்பட்ட Cockroach Janta Party என்ற நையாண்டி இயக்கம், BJP எனப்படும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையே பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டகிராமில் 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று பெரும் சாதனைப் படைத்துள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் நீதிமன்ற விசாரணையின் போது, சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்புபவர்களை ‘கரப்பான்பூச்சிகள்’ என்று உவமைப்படுத்திக் கூறியதாக தகவல் வெளியானது.

இது நாட்டின் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டிஜிட்டல் வடிவமைப்பாளர் அபிஜீத் திப்கே தலைமையில் தொடங்கப்பட்ட பக்கம்தான் இந்த ‘Cockroach Janta Party’.

கரப்பான்பூச்சி என்ற அடைமொழியைத் தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்ட இளைஞர்கள், வெறும் ஐந்தே நாட்களில் 11 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் குவித்து, BJP-யின் 8.7 மில்லியன் பின்தொடர்பாளர் சாதனையை முறியடித்துள்ளனர்.

நையாண்டியாகத் தொடங்கப்பட்டாலும், இதன் பின்னணியில் நாட்டின் வேலையின்மை, தேர்வுத் தாள் கசிவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான இளைஞர்களின் உண்மையான கோபமும், டிஜிட்டல் எதிர்ப்பும் மறைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தலைமை நீதிபதி தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகப் பின்னர் விளக்கமளித்த போதிலும், இந்த இயக்கம் தற்போதைய நவீன சமூக ஊடகங்களின் அசாத்திய ஆதிக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!