Latestமலேசியா

KTMB நிலையங்களை இணைக்க RM60 மில்லியன் செலவில் புதிய நடைபாலம்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 18 – ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link-ன் புக்கிட் சாகார் (Bukit Chagar) நிலையத்தை KTMB ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைக்க மலேசிய அரசு RM60 மில்லியன் செலவிடவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறுகையில், 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த இணைப்பு மூலம் KTMB பயணிகள் JB Sentral-ஐ விட்டு வெளியேறி நீண்ட தூரம் சுற்றிச் செல்லாமல் நேரடியாக RTS நிலையத்தை அடைய முடியும்.

மேலும், புக்கிட் சாகார் நிலையம் JB Sentral அருகிலுள்ள பேருந்து மையத்துடன் நடைபாலம் மூலம் இணைக்கப்படும். RTS சேவை தொடங்கும்போது கூடுதல் பேருந்து சேவைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

RTS திட்டத்தின் முக்கிய உள்கட்டமைப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சிக்னல், தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஜூலை இறுதியில் RTS செயல்பாட்டு பணிகள் 83 விழுக்காடு நிறைவடைந்திருந்தன.

ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து புக்கிட் சாகாருக்கு பயணிகளை அழைத்துவர குறைந்தது 200 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. RTS பயணக் கட்டணம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பின்னர் அறிவிக்கவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!