Latestமலேசியா

ரெங்கநாயகி கொலை செய்த வழக்கில் ஐவர் விடுதலை

கோலாலம்பூர், மார்ச் 29 – ஐந்து ஆண்டுகளுக்கு முன்   78 வயதுடைய  ரெங்கநாயகியை  (P.Runkanaikey)  கொலை செய்ததோடு அவரது பேரனுக்கு காயம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து ஐவர் விடுதலை செய்யப்பட்டனர்.     42 வயதுடைய  Sri Mahavishnu,  33 வயதுடைய     S .கண்ணதாசன், E. Venthaan,  T. Devaraju,  K. Vikkines Varan   ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டில்   சந்தேகம் இருப்பதை எதிர்தரப்பு  நிருபித்ததை தொடர்ந்து அவர்களை  குற்றச்சாட்டிலிருந்து  விடுதலை செய்வதாக  ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.  அவர்கள் அனைவரும்  கடந்த  2019ஆம் ஆண்டு  ஆகஸ்டு  12 ஆம் தேதி  அதிகாலை  3.30 மணிக்கும் 4.30 மணிக்குமிடையே குற்றவியல் சட்டத்தின்  302ஆவது  விதி மற்றும்   324 ஆவது  விதியின் கீழ்     சபா பெர்ணம்  Kampung Teluk Pulai யிலுள்ள    ஒரு   வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். 

 மேலும் அவர்கள் அனைவரும்   27 வயதுடைய சிலம்பரசனுக்கு  கை , தோள்பட்டை  மற்றும்  காலில்  காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.    இந்த வழக்கு விசாரணையின்போது  Prosecution தரப்பில்   14 சாட்சிகளும்  எதிரர்தரப்பில்  12 சாட்சிகளும் அழைக்கப்பட்டனர்.  குற்றஞ்சாட்டப்பட்ட இடத்தில்    அந்த ஐவரும் இருந்தனரா  என்பதை நிருபிப்பதில்  எதிர்தரப்பு  வழககறிஞர்கள் சந்தேகத்தை ஏற்படுத்தினர்.  அதன் அடிப்படையில்  குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக  நீதிபதி Nurulhuda Nur’Aini Mohamad Nor  தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!