Latestமலேசியா

2027 புதிய கல்வித் திட்டம்: தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பரிந்துரைகள்

கோலாலம்பூர், நவம்பர்-23,2027-ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள புதியக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோலாலம்பூர், செந்தூலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 15 இயக்கங்களும், சீனப்பள்ளிகளைச் சேர்ந்த 47 இயக்கங்களும் இப்பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

KP2027 எனப்படும் இந்த 2027-ஆம் ஆண்டு புதியக் கல்வித் திட்டம் தொடர்பில் கடந்த சில வாரங்களாகச் சீன மற்றும் இந்தியச் சமூகத்தினரிடையே பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் நிலவி வந்தன.

இக்குழப்பங்களுக்குத் தீர்வு காணும் நோக்கிலும், கல்வி அமைச்சுக்கு ஒருங்கிணைந்த ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவ்வகையில், தாய்மொழிப் பாடங்களுக்கான வாராந்திர 12 பாடநேரங்கள், முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேசியப் பள்ளிகளுக்கும் தேசிய மாதிரிப் பள்ளிகளுக்கும் இடையிலான இதர பாடங்களின் நேர ஒதுக்கீட்டு வேறுபாடுகளைக் களையவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரைகள் தொடர்பில் கல்வித் துணை அமைச்சருடன் நாளை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

எதிர்காலத்தில் தாய்மொழிப் பள்ளிகளின் உரிமைகள் மற்றும் கல்வித் தேவைகளை ஒருங்கிணைத்து முன்வைக்க, தாய்மொழிப் பள்ளிகளின் ஆலோசனைக் குழுவும் கொள்கை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!