
சிக், மே-25–சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 46 வயது சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட போது அந்த ஆடவர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்
கடந்த மே 6ஆம் தேதி பாலிங்கில் உள்ள அவரது வீட்டில், உரிய அனுமதியின்றி ஒரு துப்பாக்கி, 156 தோட்டாக்கள் மற்றும் ஒரு போலி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, மே 1ஆம் தேதி பாலிங்கில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது வீடு மற்றும் வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல துப்பாக்கிகள், போலி கைத்துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



