Latestஉலகம்

அமெரிக்காவில் தாய், சகோதரர் கொலை: 17 வயது இளைஞர் கைது

அமெரிக்கா, ஆகஸ்ட் 13 – அமெரிக்காவில் தாய் மற்றும் 14 வயது சகோதரரை கொலை செய்த 17 வயது இந்திய வம்சாவளி இளைஞர் மீது இரு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது தாய் மற்றும் சகோதரர் வீட்டில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இருவரையும் தொடர்புகொள்ள முடியாததால் தந்தை போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விசாரணையில், குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனைக் கதைகள் மற்றும் கருத்துகளை இணையத்திலும் ChatGPT-யிலும் சந்தேக நபர் தேடியதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், இந்தத் தேடல்கள் கொலைக்கான காரணம் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!