Latestஉலகம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து தீ விபத்து: 31 பேர் உயிரிழப்பு

கெய்ரோ, நவ.26-எகிப்து தலைநகர் கெய்ரோவில் பரபரப்பான நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரியொன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

தலைநகரின் பல பகுதிகளை இணைக்கும் கெய்ரோ ரிங் ரோட்டில் நிகழ்ந்த அவ்விபத்தில், அருகிலிருந்த பல கார்களும் தீப்பற்றி எரிந்தன. மக்கள் அதிகம் வசிக்கும் Al-Waraq பகுதியில் பெரும் தீப்பிழம்பும் கரும்புகையும் எழுந்தன. அக்காட்சிகள் அடங்கிய காணொளி பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்த பகுதியைச் சுற்றியிருந்த கட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பப்பட்டதாகச் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. காயமடைந்த 15 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதேவேளை தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்விபத்து குறித்து விசாரணை தொடக்கப்பட்டுள்ளது. அவசரகால நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எகிப்து சுகாதார அமைச்சர் சம்பவ இடத்தையும் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் பார்வையிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!