
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மற்ற 5 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நால்வர் வெறும் எச்சரிக்கை கடிதத்தோடு தப்பினர்.
விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த தேசியை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இந்த முடிவை எடுத்ததாக, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC அறிக்கை வாயிலாகக் கூறியது.
அபராதம் விதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் RM25,000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொது மக்கள் டிஜிட்டல் தளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும், சமூக அமைதியை பாதிக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் MCMC அறிவுறுத்தியுள்ளது.



