Latestமலேசியா

செத்தியுவில் சொந்த மகளிடம் காமச் சேட்டை; 15 வயது மகள் புகார், 50 வயது தந்தை கைது

செத்தியு, ஜூன்-22-தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மாலை மணி 6 அளவில் கைது செய்யப்பட்டதாக செத்தியு மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஷாரில் அஸ்ரி முகமட் ஸைய்ன் (Zahril Asri Mohd Zain ) தெரிவித்தார்.

ஜூன் 15 ஆம் தேதியன்று மாலை மணி 3.54 க்கு அந்த ஆடவரின் 15 வயது மகள் புகார் செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டான்.

சம்பந்தப்பட்ட சிறுமி தனது இளைய சகோதரியுடன் வீட்டில் இருந்தபோது, ​​மே 29 ஆம்தேதியன்று மதியம் சுமார் 12 மணியளவில் அவளது தந்தை இந்த குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

இச்சம்பவத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட சிறுமி அதிர்ச்சிக்கும் மனச் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளார்.

அந்த சிறுமி ஆறு வயதாக இருந்தபோது அவரது தந்தையால் இந்த கொடூர செயலின் பாதிப்புக்கு உள்ளானதாக தெரியவந்தது.

ஜூன் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ், இம்மாதம் 27 ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்படுவதற்கான விண்ணப்பம் நேற்று செத்தியு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் தண்டனைச் சட்டத்தின் 376 (3) விதியின் கீழும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!