Latestமலேசியா

ஜோகூர், நெகிரி தேர்தல்; தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க PH-BN-க்கு சாஹிட் வேண்டுகோள்

கோத்தா திங்கி, ஜூலை-5-ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு தரப்பும் தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

கோத்தா திங்கியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், ஒற்றுமை அரசாங்கத்தின் நல்லுறவைப் பேண வேண்டியது அவசியம் என்றும், அரசியல் பிரச்சாரங்கள் முதிர்ச்சியுடனும் தொழில்முறையுடனும் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எதிர் திசையில் தாக்குதல்களை நடத்துவதற்குப் பதிலாக, வேட்பாளர்களின் தகுதி, கௌரவம் மற்றும் அவர்களின் தொழில்முறைப் பின்னணியை மக்களிடம் கொண்டு செல்வதே தற்போதைய அரசியல் சூழலில் வெற்றிக்கான வழி என அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இரு கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

மத்திய அரசாங்கத்தில் ஒன்றாக இடம்பெற்றிருந்தாலும், PH-BN இரண்டும் ஜோகூர், நெகிரி மாநிலத் தேர்தல்களில் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிடுவதால் களத்தில் அனல் பறக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!