Latestமலேசியா

டுங்குன் கல்லூரி விடுதியில் பச்சிளம் குழந்தையின் உடலை ரகசியமாகப் புதைத்த விவகாரம்: காதலன் கைது

டுங்குன், செப்டம்பர்-29,திரங்கானு, டுங்குனில் உள்ள கல்லூரி தங்கும் விடுதிக் கழிப்பறையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலை இரகசியமாக அடக்கம் செய்து மறைக்க முயன்ற வழக்கில் 24 வயது மெக்கானிக் ஒருவர் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

​குழந்தையின் பிறப்பை மறைக்கும் நோக்கில் உடலை இரகசியமாக புதைத்த அல்லது அப்புறப்படுத்திய குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்காக டுங்குன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குவாலா திரங்கானுவைச் சேர்ந்த அந்த ஆடவர், சம்பந்தப்பட்ட 19 வயது மாணவியின் காதலன் என நம்பப்படுகிறது.

மாணவி உடல்நலக் குறைவால் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த ஆடவர் ஞாயிற்றுக்கிழமை கைதுச் செய்யப்பட்டார்.

​விசாரணையில், தாம் கர்ப்பமாக இருந்ததை அறியாத அந்த மாணவி, செப்டம்பர் 9-ஆம் தேதி விடுதிக் கழிப்பறையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததும், அக்குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

பின்னர் குழந்தையின் உடலை தனது அறையின் அலமாரியில் மறைத்து வைத்த மாணவி, அதனை இரகசியமாக அடக்கம் செய்ய உதவுமாறு தனது காதலனை அழைத்துள்ளார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!