
அலோர் காஜா, ஏப்ரல்-25-மலாக்கா, அலோர் காஜாவில் கார் ஓட்டுநரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநரின் செயல் வைரலாகியுள்ளது.
Plaza Mahkota-லிருந்து Kota Laksamana நோக்கிச் சென்ற கார் மீது, தனியார் மருத்துவமனை அருகே வளைவு ஒன்றில் சொகுசுப் பேருந்து மோத முயன்றது.
பிறகு, Syed Abdul Aziz பாலத்தில் மீண்டும் காரை வழிமறித்து சுவரில் மோதச் செய்யும் வகையில் அச்சுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, Kota Laksamana பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, விவரம் கேட்கச் சென்ற புகார்தாரரின் மகனை அந்த ஓட்டுநர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இளைஞரைத் தாக்க முயன்றதுடன், அவரைச் சண்டைக்கு இழுக்கும் வகையில் அந்த ஓட்டுநர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோ ஆதாரங்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைமறைவாக உள்ள அந்த ஓட்டுநரை போலீஸார் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர்.



