மாணவர்களுக்கும் மாற்று திறனாளிக்கும் KTM-யில் வரம்பற்ற இலவச பயண அனுமதி; உடனே விண்ணப்பிக்கவும்
கோலாலம்பூர், ஏப் 22 – My Rail Life என்ற திட்டத்தின் கீழ் KTMB எனப்படும் மலேயன் ரயில்வே ஒரு ஆண்டிற்கு வரம்பற்ற இலவச பயணத்திற்கான பாஸ் வசதியை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. முதல் படிவம் முதல் ஆறாம் படிவ பிள்ளைகளும் , மாற்று திறனாளிகளும் Gemas – Tumpat வரையிலும், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் வட பகுதிக்கான பயணச் சேவைக்கும் இலவச ரயில் பயணத் சேவைக்கான பாஸ் வழங்கப்படும். பள்ளிப் பிள்ளைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் செலவை குறைக்கும் நோக்கத்தில் Pas My Rail Life இலவச பாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. வட பகுதிக்கு Shuttle ரயில் சேவை , பள்ளி மாணவர்கள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மாற்று திறனாளிகளுக்காக இந்த இலவச பயணச் சேவை திட்டத்தை KTM ஊக்குவிக்கிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் இறுதிவரை இந்த இலவச சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.