
குவாலா திரங்கானு, ஜூன் -16-குவாலா திரங்கானுவில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஆசிரியர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த ஆசிரியர் அவரது வீட்டில் கைதுச் செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் கூறியது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் அச்சிறுவனுக்கு ஆரம்பப் பள்ளியில் பாடம் நடத்தியவர் என்றும், ஜூன் 4ஆம் தேதி இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஜூன் 21ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



