Latestமலேசியா

லாஹாட் டத்துவில் ரொட்டி சானாய் சமையல்காரர் கொலை; ஆடவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

தாவாவ், அக்டோபர்-2சபா, லாஹாட் டத்துவில் ரொட்டி சானாய் சமையல்காரரைக் கொலைச் செய்த வேலையில்லாத ஆடவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

37 வயதான Ridzuan Ahmad Zaini Logan, 36 வயதான Sirlin Salleh என்பவரைக் கொலை செய்த குற்றத்தை தாவாவ் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

5 பிள்ளைகளின் தாயான Sirlin, 2023-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி லாஹாட் டத்து, கம்போங் பீசாங்கில் உள்ள புதர் பகுதியில் கொல்லப்பட்டார்.

வேலைக்குச் செல்லும் வழியில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவரது வீட்டிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் குடும்பத்தினர் அவரது உடலைக் கண்டெடுத்தனர்.

தலையில் பலத்த காயம், கழுத்தில் வெட்டுக் காயங்கள் மற்றும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முயன்றபோது கைகளில் ஏற்பட்டதாக நம்பப்படும் காயங்களும் கண்டறியப்பட்டன.

அவர் பாலியல் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கலாம் என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கடைசியில் நீதிபதி, குற்றவாளிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகளையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!