Latestமலேசியா

விசா மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா ஊழல்: 10 அதிகாரிகள் உட்பட 33 பேரை அதிரடியாகக் கைதுச் செய்த MACC

புத்ராஜெயா, ஜூலை-10 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா மற்றும் கோட்டா அனுமதிகளில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில், 10 அமுலாக்க அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 33 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தடுப்புக் காவலில் எடுத்துள்ளது.

 

புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கூட்டு அதிரடி சோதனையில், 20 முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த 24 ஆண்களும் 9 பெண்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

 

குடிநுழைவுச் சட்டங்களை மீறிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க அவர்கள் இலஞ்சம் பெற்றதும், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் விசா அனுமதி வழங்கி வந்ததும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து 2009 MACC சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளை, மேலும் பலர் கைதுச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!