
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – 16 வயதில் தொடங்கிய உடற்பயிற்சி பயணம், 3 உலகச் சாதனைகள் வரை பெறச்செய்துள்ளது! யார் இந்த KJEY?
பஹாங், கோலா லிப்பிஸைச் சேர்ந்த ஜெய் பிரபாகரன் தேவர் எனும் KJEY, இன்று 3 உலகச் சாதனைகள், ஓர் ஆசியச் சாதனை மற்றும் 6 தேசியச் சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.
16 வயதில் கால்பந்து வீரராக இருந்தபோது, மெலிந்த உடலமைப்பால் எதிர்கொண்ட சிரமங்களே உடலை வலுப்படுத்த ஜிம்மிற்குச் செல்ல இவரைத் தூண்டியதாம்.
2013ஆம் ஆண்டு Mr Pahang போட்டியின் Junior பிரிவில் தனது முதல் முயற்சியிலேயே வெண்கலப் பதக்கம் வென்ற KJEY, பின்னர் மூன்று முறை Mr Pahang Champion, Mr Selangor Champion, Mr Gym Malaysia Champion மற்றும் SUKMA தங்கப் பதக்கம் என பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
Interview
போட்டி மேடைகளைத் தாண்டி சாதனை முயற்சிகளிலும் களமிறங்கிய இவர், 2023-ல் 12 மணி நேரம், 2024-ல் 15 மணி நேரம், 2026-ல் 18 மணி நேரம் என இடைவிடாத Cardio மற்றும் Weightlifting செய்து மூன்று உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
இதுதவிர ஓர் ஆசியச் சாதனை மற்றும் 6 தேசியச் சாதனைகளையும் படைத்திருக்கின்றார்.
ஆனால், 18 மணி நேர உலகச் சாதனைக்கான பயணம் எளிதானதாக இருக்கவில்லை. கடுமையான பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் தனது உடலை நீண்ட நேர செயல்பாட்டுக்குப் பழக்கப்படுத்தும் தயாரிப்புகளை மேற்கொண்டதாக கூறுகிறார் KJEY.
Interview
சாதனைக்கு முன் மேற்கொண்ட Pre-attempt-ல் 18 மணி நேர இலக்கை அவரால் எட்ட முடியவில்லை. இருப்பினும், ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற அதிகாரப்பூர்வ முயற்சியில் எதிர்பார்ப்பை மீறி 18 மணி நேர சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தார் இவர்.
இதற்கிடையில் முட்டி, நெஞ்சப்பகுதி மற்றும் அடிவயிறு தொடர்பாக மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டபோதும், தனது சாதனைப் பயணத்தை KJEY கைவிடவில்லை.
தற்போது MiFit மற்றும் ‘Kelab Bina Badan KJ’ மூலம் இந்திய இளைஞர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சித் துறையில் வழிகாட்டி வரும் இவர், அடுத்ததாக ஆசிய அளவில் புதிய சாதனைகளைப் படைப்பதுடன், 2028 ஒலிம்பிக் Weightlifting தகுதிச் சுற்றையும் இலக்காகக் கொண்டுள்ளார்.
Interview
16 வயதில் தன்னை வலுப்படுத்த தொடங்கிய பயணம்…
இன்று KJEY-யை உலகச் சாதனைகள் வரை அழைத்துச் சென்றுள்ளது.
இவ்வேளையில், அடுத்த இலக்கை அடைவதர்க்கும் இன்னும் உயர்வதர்க்கும் வாருங்கள் அனைவரும் வாழ்த்துவோம் இவரை.



