கார் பந்தயத்தில் ஃபெராரி அணிக்காக முதல் வெற்றியைப் பதிவு செய்த ஹாமில்டன்

பார்சிலோனா, ஜூன்-15– பார்சிலோனா கிராண்ட் பிரிக்ஸ் (Barcelona Grand Prix) கார் பந்தயத்தில், ஃபெராரி (Ferrari) அணியின் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) வெற்றி பெற்று, அந்த அணிக்காக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஏழு முறை உலக சாம்பியனான ஹாமில்டன், ஜார்ஜ் ரசல் (George Russell) மற்றும் லாண்டோ நோரிஸ் (Lando Norris) ஆகியோரை முந்தி முதலிடத்தைப் பிடித்தார்.
சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்த கிமி ஆண்டோனெல்லி (Kimi Antonelli), கார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தயத்தின் இறுதிக்கட்டத்தில் போட்டியிலிருந்து விலகினார்.
இதனால், அவரது தொடர்ச்சியான ஐந்து பந்தய வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
41 வயதான ஹாமில்டன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகு, தன்னை ஆதரித்த அணியினருக்கும் ரசிகர்களுக்கும் ஹாமில்டன் நன்றி தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் ஜார்ஜ் ரசல் இரண்டாவது இடத்தையும், லாண்டோ நோரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



