
கோலாலம்பூர், பிப் 1 – மலேசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையாக திகழும் சுங்கை பூலோ சிறையில் தற்போது 2,000 த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிறையில் நெரிசல் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் துறையின் துணையமைச்சர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். அந்த சிறையில் 2,500 கைதிகள் மட்டுமே இருக்க முடியும். சட்ட மற்றும் இயங்கங்களின் சீரமைப்புக்கான துணையமைச்சருமான ராம்கர்ப்பால் சிங் திங்கட்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலையை பார்வையிட்டார்.