Latestமலேசியா

சுற்றுலா அமைச்சர் தியோங் கிம் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கோரிக்கை

கோலாலம்பூர், பிப் 29 – சுற்றுலா மலேசியத்துறையின் முன்னாள் தலைமைச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது, bak kut teh உட்பட பல்வேறு விவகாரம் தொடர்பில் சுற்றுலா ,கலை மற்றும் கலாச்சார அமைச்சர் Tiong King sing மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் Akmal saleh கோரிக்கை விடுத்துள்ளார். பன்றி இறைச்சி அடிப்படையிலான bak kut Teh நாட்டின பாரம்பரிய உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதோடு சுற்றுலா மலேசியா தலைமை இயக்குநராக இருந்த Ammar Abdul Ghapar ரின் பதவி நிலையை குறைத்திருப்பது போன்ற விவகாரத்தில் Tiong கின் செயல்பாடு மனநிறைவாக இல்லையென்றும் Akmal தெரிவித்துள்ளார்.

Bak Kut Teh யை பாரம்பரிய உணவாக அங்கீகரிப்பதற்கு பதிலாக சீனர்களின் Nasi Goreng மற்றும் அனைத்து இன மற்றும் சமயங்களைக் கொண்ட மக்கள் உட்கொள்ளும் இதர வகை உணவுகள் குறித்து அவர் அதிகமாக அறிந்துகொண்டிருக்க வேண்டும். மலேசியர்களின் உணர்வுகளை அமைச்சர் நினைக்க தவறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நாம் கேட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென இன்று தமது முகநூலில் Akmal பதிவிட்டுள்ளார். சுற்றுலா தலைமை இயக்குனர் எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்ப செயல்பட தவறினார் என்ற காரணத்தினால் அவரது பதவி நிலையை குறைக்கும்போது சிறந்த சேவையாற்றத் தவறியது மற்றும் வரலாற்றில் மிக மோசமான அமைச்சராக இருக்கும் Tiong கிற்கு எதிராகவும் இதே அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும் என Akmal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!