
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் இந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4. 4 விழுக்காடு உயர்ந்தபோதிலும் அந்நோயின் நிலை கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் (Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
ஜூன் 6-ஆம் தேதி நிலவரப்படி, காசநோயால் மொத்தம் 492 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 856 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இது 43.1 விழுக்காடு குறைவாகும் என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் ( Dzulkefly ) குறிப்பிட்டார்.
நோயாளிகள் முன்கூட்டியே சிகிச்சை பெறுவதை உறுதிசெய்யும் வகையில், நோயைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதன் விளைவாகவே இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் காசநோயின் தற்போதைய நிலை குறிப்பாக தொற்று , உயிரிழப்புப் போக்குகள் மற்றும் நோயைக் கண்டறிவதில் உள்ள சவால்கள் குறித்து பத்து காஜா பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு நாயுடு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Dzulkefly இத்தகவலை வெளியிட்டார்.



