Latestமலேசியா

ஜோகூரில் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகள் மூடல்; மோசமடையும் புகைமூட்டத்தால் நடவடிக்கை

ஜோகூர் பாரு, அக்டோபர் -11 – ஜோகூரில் புகைமூட்டம் மோசமடைந்து காற்றின் தரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16-ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் வியாழன் – வெள்ளி என 2 நாட்களுக்கு அம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், நாளை திங்கட்கிழமை தொடங்கி மேலும் 5 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என கல்வி மற்றும் தகவல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr. Muhamad Naqib Md. Ghazali தெரிவித்தார்.

ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவுக்கிணங்க, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வீட்டிலிருந்தே இணையம் வழியாகத் தொடரும் என்றார் அவர்.

ஜோகூரில், பாசீர் கூடாங், லார்க்கின், தங்காக், செகாமாட், கோத்தா திங்கி, பெங்கராங், பத்து பஹாட் மற்றும் குளுவாங் ஆகிய 8 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

புகைமூட்டம் நீடிப்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் காற்றின் தரம் கட்டுப்பாட்டில் இருப்பதால், இன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!