Latestஉலகம்

தாய்லாந்தில் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு; 41 லட்சம் பேர் பாதிப்பு

பேங்கோக், அக்டோபர் 6 – தாய்லாந்தில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 41.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 26 மகாணங்கள் மற்றும் தலைநகர் பேங்கோக்கில் சுமார் 35.2 லட்சம் பேர் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரதமர் அனுடின் சான்விராகுல் (Anutin Charnvirakul), வெள்ளநீரை விரைவாக வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும், வெள்ளத்துக்குப் பிந்தைய மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நிரம்பியுள்ள அல்லது நிரம்பும் நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை உடனடியாக வெளியேற்றவும், அடைபட்ட கால்வாய்கள் மற்றும் வடிகால்களைச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை வரை பல பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!