
திரெங்கானு, ஜூன் 12 – குவாலா திரெங்கானுவில் ரோஹிங்கியா (Rohingya) சமூகத்தினரால் நடத்தப்படுவதாக கூறப்படும் பள்ளி தொடர்பில் கல்வி அமைச்சு (KPM) விசாரணை நடத்தவுள்ளது.
மலேசியாவில் எந்தவொரு பள்ளியும் கல்விச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று இயங்க வேண்டும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh), தெரிவித்தார்.
அனைத்து கல்வி நிறுவனங்களும் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கம்போங் லாடாங் தித்தியான் (Kampung Ladang Titian), குவாலா திரெங்கானு பகுதியில் இயங்குவதாக கூறப்படும் இந்த பள்ளி குறித்து, கடந்த பிப்ரவரி முதல் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



