Latestமலேசியா

தேசிய தினக் கொண்டாட்டங்கள்: அரசாங்கம் இன்று முடிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – நாட்டில் அதிகரித்து வரும் புகைமூட்டம் காரணமாக, 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் அளவு மற்றும் நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்வதா என்பது குறித்து அரசாங்கம் இன்று முடிவு செய்யவுள்ளது.

தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் (Tan Sri Shamsul Azri Abu Bakar), சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் வானிலைத் துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் (Datuk Seri Fahmi Fadzil) தெரிவித்தார்.

பொதுமக்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் 1,500 மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்படும்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா டாத்தாரனில் தேசிய தின அணிவகுப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஆகஸ்ட் 30ஆம் தேதி டத்தாரன் மெர்டேக்காவில் நடைபெறவுள்ள தேசிய தின முன்னிரவு நிகழ்ச்சியும் மதிப்பாய்வு செய்யப்படும்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயாவில் காற்றுத் தரக் குறியீடு (API) 155 ஆக பதிவாகி, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மற்றும் வறண்ட வானிலை தொடரும் எனவும், அண்டை நாடுகளில் இருந்து வரும் புகைமூட்டம் நிலைமையை மேலும் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!