Latestமலேசியா

தொழிலாளர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி: பிரதமர் அன்வார் சிறப்பு அறிவிப்பு – ரமணன் தகவல்

புத்ராஜெயா, ஏப்ரல்-30,

உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த மனிதவள அமைச்சு (KESமற்றும் மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2025 கிக் தொழிலாளர்கள் சட்ட அமுலாக்கம் மற்றும் 2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள 8 சட்டத் திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, வரும் ஜூன் மாதம் முதல் ’24 மணிநேரப் பாதுகாப்புத் திட்டம்’ (Skim Lindung 24 Jam) அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது வேலை நேரத்திற்கு வெளியே நடக்கும் விபத்துகளுக்கும் முறையான பாதுகாப்பை வழங்கும்.

மேலும், TVET கல்வியின் மூலம் 95.5 விழுக்காட்டு மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள சாதனையையும் ரமணன் சுட்டிக்காட்டினார்.

இவ்வேளையில், நாளை மே 1-ஆம் தேதி புக்கிட் ஜாலில் நடைபெறும் தேசிய அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொழிலாளர்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!