Latestமலேசியா

பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி

பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 43-ஆவது கிலோ மீட்டரில் நேற்று இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது.

இரும்புத் துகள்களை ஏற்றிச் சென்ற டிரேய்லர் லாரி ஒன்று, வளைவில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து, பக்கத்து பாதையில் சென்ற கார் மீது கவிழ்ந்து நசுக்கியது.

​இதில் காரில் பயணம் செய்த 55 வயது ஓட்டுநர், 58 வயது மாது, 26 வயது பெண் மற்றும் ஒரு வயதே ஆன குழந்தை ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

​தலையில் காயமடைந்த 40 வயது லாரி ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் மீது ஏற்கனவே 15 போக்குவரத்து சம்மன்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!