Latestமலேசியா

வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்கும் விண்ணப்பம் ஜனவரி 18 -ஆம் தேதி திறக்கப்படுகிறது

கோலாலம்பூர், ஜன 15 – நாட்டில் குறிப்பிட்ட தொழிற்துறைகளில் வேலை செய்வதற்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அதன் தொடர்பான விண்ணப்பங்கள் கட்ட கட்டமாக திறக்கப்படுமென, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.. சரவணன் தெரிவித்தார்.

சிறப்பு விலக்கின் அடிப்படையில் தோட்டத் தொழில்துறையில் வேலை செய்ய 32,000 அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான விண்ணப்பம் இம்மாதம் ஜனவரி 28-ஆம் தேதி திறக்கப்படும்.

சிறப்பு விலக்கு அளிக்கப்படாத தோட்டத் தொழில்துறை உட்பட இதர குறிப்பிட்ட துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்படும்.

முதலாளிகள் www.fwcms.com.my எனும் அகப்பக்கத்தின் மூலமாக , வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாமென , டத்தோ ஶ்ரீ எம். சரவணன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!