
தெஹ்ரான் , ஏப் 16 -ஹோர்முஸ் நீரிணையில் சுமார் 20,000 மாலுமிகளும், கிட்டத்தட்ட 2,000 கப்பல்களும் சிக்கியுள்ளதாக அனைத்துலக கடல்சார் அமைப்பான (IMO) அறிவித்துள்ளதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நீரிணையில் சிக்கியுள்ள மாலுமிகளையும், கப்பல்களையும் வெளியேற்றுவதற்கான அவசரகாலத் திட்டத்தை அனைத்துலக கடல்சார் அமைப்பு தயாரித்து வருவதாக நேற்றைய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. .
ஹோர்முஸ் நீரிணை சுமார் 30 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டிருப்பதாலும், பாதுகாப்பு அபாயம் இன்னும் அதிகமாக இருப்பதாலும், நாடுகளுக்கிடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு தேவைப்படுவதால், கப்பல்கள் வெளியேற்றும் நடவடிக்கையை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்று அனைத்துலக கடல்சார் அமைப்பின் பொதுச்செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் (Arsenio Dominguez) தெரிவித்தார்.



