
போபல், நவம்பர்-15,இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, ரசகுல்லா இனிப்பு எனக் கூறி வழங்கப்பட்ட வெடிகுண்டு வாயில் வெடித்ததில், 35 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், நவம்பர் 10-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
உயிரிழந்தவர் ராஜேந்திர பரவுத்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த ராஜேந்திராவிடம், அவரது நண்பர் ஒருவர் ரசகுல்லா இனிப்பு எனக் கூறி உருண்டை வடிவிலான பொருளை வழங்கியுள்ளார்.
அதை உண்மையான இனிப்பு என நம்பி ராஜேந்திரா வாயில் வைத்துக் கடித்தபோது, அது திடீரென வெடித்தது.
இதில் அவரது வாய் மற்றும் தாடைப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு அது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இது திட்டமிட்ட கொலை முயற்சியா அல்லது விபரீதமான விளையாட்டா என்பது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.



