Latestமலேசியா

குவாந்தனில் துரித உணவு விற்பனை நிலைய வாடிக்கையாளரை அச்சுறுத்தினர் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது

குவந்தான், ஏப் 16 – ஏப்ரல் 12 ஆம் தேதி Kuantan Sungai Isap பிலுள்ள துரித உணவு விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளரைத் தூண்டிவிட்டு மிரட்டியதாகக் கூறப்படும் ராணுவ வீரர் மற்றும் வங்கி குமஸ்தா உட்பட ஐவர் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டனர். மற்ற சந்தேக நபர்களில் ஒருவர் கார் விற்பனையாளர், ஒரு குத்தகையாளர் மற்றும் வர்த்தகர் ஆகியோரும் அடங்குவர். குவாந்தனில் வசிக்கும் இவர்கள் அனைவரும் 27 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் நால்வர் இதற்கு முன் போதைப் பொருள் குற்றச்சாட்டு பின்னணியை கொண்டவர்கள் என மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

ஏப்ரல் 12ஆம் தேதி இரவு மணி 10.25 அளவில் Maran, Bandar Pusat Jengka வின் வர்த்தகரான மாறன் என்ற 40 வயது புகார்தாரர் தனது குடும்பத்துடன் கடைக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கடைக்குள் உள்ளே செல்வதற்கு முன் துரித உணவை புறக்கணித்துவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படும் பல்வேறு நபர்கள் தம்மை அழைத்ததாகவும் அந்த வளாகத்திற்கு வெளியே வந்து அவர்களை அணுகியபோது அவர்களில் ஒருவன் அவதூறான வார்த்தைகளில் திட்டியதோடு தமக்கு ஆத்திரத்தை தூண்ட முயன்றதால் அவர்களை புறக்கணித்துவிட்டு கடை வளாகத்திற்குள் மாறன் திரும்பிச் சென்றுள்ளார். பின்னர், அவரும் அவரது குடும்பத்தினரும் கடையை விட்டு வெளியேறத் தயாராக இருந்தபோது, ​​சந்தேக நபர்கள் மீண்டும் அவரை அணுகி திட்டி அவமானப்படுத்தினர். அவர்களில் ஒருவன் தலைக்கவசத்தை கையில் பிடித்துக்கொண்டு அதனை மற்றொரு நபரிடம் கொடுத்ததோடு தாக்கப் போவதாக மாறனை மிரட்டியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிய அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதல் சந்தேகப் பேர்வழி ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மாலை மணி 3.30 அளவில கைது செய்யப்பட்டதாகவும் அந்த நபரிடமிருந்து காரை பறிமுதல் செய்ததாக Wan Mohd Zahari தெரிவித்தார். அன்றைய தினமே மேலும் மூவர் கைது செய்யப்பட்ட வேளையில் மறுநாள் மாலை 6.30 மணியளவில் ஐந்தவாது நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!