Latestமலேசியா

கொலைக் குற்றச்சாட்டை மூத்த போலீஸ் அதிகாரி மறுத்தார்; 30 நாட்களுக்கு வழக்கு விசாரணை

ஈப்போ, மே 14 – 5 ஆம் படிவ மாணவன் ஒருவனை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் துணை சூப்பிரடண்ட் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெறும் என ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது. 45 வயதுடைய Mohd Nazri Abdul Razak என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான தேதியை உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ Bhupindar Singh Gurcharan Sing Preet நிர்ணயித்தார். இதற்கு முன்னதாக நீதிபதி Bhupindar Singh முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது கெடா போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றிவந்தவருமான Mohd Nazri குற்றச்சாட்டை மறுத்தார்.

கடந்த ஆண்ட டிசம்பர் 15ஆம் தேதி காலை மணி 11.45 முதல் நண்பகல் மணி 12. 40 மணிக்குமிடையே கிந்தா மாவட்டத்தில் Jati தேசிய இடைநிலைப்பள்ளிக்கு முன் Jalan Taman Jati 1 இல் Muhammad zahari Affendi Muhd Zamri க்கு என்ற மாணவருக்கு மரணம் விளைவித்தன் தொடர்பில் Mohd Nazri க்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படாவிட்டால் 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 12 க்கும் குறைவான பிரம்படி ஆகியவை வழங்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் Mohd Nazri குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!