
தெமர்லோ, ஏப் 28 – வாடிக்கையாளர் போல் நடித்த ஒரு நபர் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் காப்பை திருடிக்கொண்டு , காத்திருந்த காரில் தப்பிச் சென்றான் .
இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தெமர்லோ Jalan Ahmad Shahவில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்ததாக நகைக்கடையின் உரிமையாளரான கமாலுல் ஹயாட் ரிட்வான் ( Kamalul Hayat Redzwan ) தெரிவித்தார்.
அந்த நபர் கடந்த வாரம்கூட நகைக் கடைக்கு வந்து தங்கக் காப்பை பார்த்து பரிசோதித்தான். அவன் நேற்று மீண்டும் கடைக்கு வந்ததால் நகையை வாங்குவதற்காகத்தான் வந்திருக்கிறான் என் தாம் நினைத்தாக நகைக்கடை உரிமையாளர் கூறினார்.
தாம் அந்த ஆடவனை உபசரித்து நகையை அணிந்து பார்க்க பார்க்கக் கொடுத்தபோது, அவன் திடீரென்று கடையை விட்டு வெளியே ஓடியதோடு ஏற்கனவே காரில் காத்திருந்த மற்றொரு ஆடவருடன் பெரோடுவா Bezza காரில் தப்பிச் சென்றதை பார்த்ததாக அவர் விவரித்தார்.
உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் அக்காரை துரத்திச் சென்ற போதிலும் அந்த கார் தெமர்லோ பாலத்தை நோக்கி வேகமாக சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் நகைக்கடையின் (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளதால் சந்தேக நபர் கைது செய்யப்படுவார் என்று நகைக்கடை உரிமையாளர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



