Latestமலேசியா

நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு -ஷாஹிட் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர், ஏப் 17 – சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அனுமதிப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு தொடர்பான ஆவணத்தை சிலாங்கூர் மாநில அம்னோவின் முன்னாள் பொருளாளார் Tengku Zafrul Abdul Aziz ஜனவரி 30 ஆம் தேதி Country Heights சிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே தம்மிடம் காட்டியதாக அம்னோவின் தலைவருமான Zahid கூறிக்கொண்டார். நஜிப்பின் நீதித்துறை சீராய்வு மனு மீதான விண்ணப்பத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியிட்ட தனது ஆதரவுக்கான எழுத்துப் பூர்வமான சத்திய பிரமான பத்திரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான அந்த ஆவணத்தை சமர்ப்பிக்க அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும் என Zahid தெரிவித்துள்ளார்.

முன்னாள் பேரரசர் Sultan Abdullah தெரிவித்த கூடுதல் உத்தரவின் நகலை தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்த அல்லது ஸ்கேன் செய்த ஆவணத்தை Tengku Zafrul தனது தொலைபேசியில் காட்டியதாக அவர் கூறினார்.
காஜாங் சிறையில் இருக்கும் தற்போதைய சிறைவாசத்திற்குப் பதிலாக, வீட்டுக் காவலின் நிபந்தனையின் கீழ், நஜீப்பின் விண்ணப்பம் குறைக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கப்படுவார் என்று முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவின் உள்ளடக்கங்கள் வெளிப்படையாகக் கூறும் இணைப்பு உத்தரவு ஜனவரி 29 தேதியிடப்பட்டதோடு அதில் முன்னாள் பேரரசரின் முத்திரை கையெழுத்திடன் இருந்ததையும் தாம் பார்த்ததாகவும் Zahid தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!