
புத்ராஜெயா, ஜூலை-19-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது அவதாரத்தை (Avatar) அறிமுகப்படுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த ‘Digital Twin’ மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் கருத்துக்கள், கவலைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகப் பிரதமரிடம் தெரிவிக்கலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி மக்களின் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், ‘மலேசியா மடானி’யைக் கட்டமைக்க இந்த புதியத் தளத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அவதாரத்தைத் தொடர்பு கொள்ள விரும்புவோர், 03-7885 0523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



