Latestமலேசியா

14 ஆண்டு கால நிக்கோல் டேவிட்டின் சாதனைக்கு பின்… PSA ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சிவசங்கரி வரலாற்றுச் சாதனை

பாரீஸ், ஜூன்-20 – பிரான்ஸ், பாரீஸில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற PSA உலகக் கிண்ணத் ஸ்குவாஷ் தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டியில், நாட்டின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசங்கரி இறுதியாட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

​நேற்றையப் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்திலுள்ள சிவசங்கரி, எகிப்தின் உலக சாம்பியனும் தொடரின் முதல் நிலை வீராங்கனையுமான அமினா ஓர்ஃபியை (Amina Orfi) 8-11, 11-10, 11-8, 11-10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றார்.

74 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மிகச் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்திய அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு டத்தோ நிக்கோல் டேவிட்டுக்குப் பிறகு இந்தத் தொடரின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

​இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் உலக தரம் வாய்ந்த மற்றொரு எகிப்திய வீராங்கனையான ஹானியா எல் ஹமாமியை (Hania El Hammamy) எதிர்கொள்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!