Latestமலேசியா

சிறுமியை துன்புறுத்திய மாற்றான் தந்தையான போலீஸ் அதிகாரி; வைரல் வீடியோவால் பரபரப்பு

சிறுமியை துன்புறுத்திய மாற்றான் தந்தையான போலீஸ் அதிகாரி; வைரல் வீடியோவால் பரபரப்பு

கோலாலாம்பூர், பிப்ரவரி-19,

ஒரு சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரி தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, பரவலாக அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மாற்றான் தந்தை என நம்பப்படும் அவ்வாடவர், சிறுமியை காருக்குள்ளும், வீட்டிலும் தாக்கியதாகக் வீடியோவில் காட்டப்படுகிறது.

சிறுமி அழுது கொண்டிருக்கும் நிலையில், அவர் மீண்டும் மீண்டும் அடித்ததாகத் தெரிகிறது.

இந்தக் காட்சிகள், சந்தேக நபர் தானே பதிவு செய்தவை என நம்பப்படுகிறது.

சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

போலீஸ் தரப்பிலிருந்தும் அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், உடனடியாக விசாரணை செய்து, குழந்தையின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் என வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!