Latestமலேசியா

ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி

கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஜோகூர்பாரு Tampoi Indah பகுதியில் காலை 8 மணி முதல் துர்நாற்ற மாசுபாடு கண்டறியப்பட்டதாக குடியிருப்புவாசிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பலரின் உடல் நலத்தை பாதித்து வருவதாகவும் , குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுவதாக அவர் கூறினார்.

இம்முறை துர்நாற்றம் ஒரு ரசாயன வாசனை போல இருந்தது
சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியும் இன்று காலை முதல் மாசுபாடு பிரச்சனைகளை சந்தித்து வருவதை தாம் புரிந்துகொண்ட போதிலும் அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த மர்மமான துர்நாற்ற மாசுபாடு அடிக்கடி அதிகரித்து வருவது பலரை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக Jocelyn Teo என்ற குடியிருப்புவாசி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!