
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின் செயலாளரான லரிஜானி, அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தியக் குழுவில் இருந்தவராவார்.
ஏற்கனவே, உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி, மூத்த கமாண்டோ சுலைமானி உள்ளிட்டோர் கொல்லப்பட்ட நிலையில், லரிஜானியை அடுத்தக் குறியாக வைத்து இஸ்ரேல் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆகக் கடைசி தாக்குதலில் லரிஜானியைக் கொன்றிருப்பதாக
இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
லரிஜானியுடன் அவரது மகன் மொர்தேசாவும் (Morteza) சில மெய்க்காப்பாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
SNSC-யின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் Alireza Bayat-டும் அதே தாக்குதலில் கொல்லப்பட்டார்.
புதிய உச்சத் தலைவர் ஆயதொலா மொஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளார் அல்லது கோமா நிலையில் உள்ளார் என முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் வெளிவரும் நிலையில், லரிஜானியும் கொல்லப்பட்டுள்ளதால், ஈரானை இப்போது உண்மையில் யார் தான் நிர்வகித்து வருகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.



