Latestஉலகம்சிங்கப்பூர்மலேசியா
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, 26 வயது மலேசிய ஆண் மற்றும் 24 வயது மலேசிய பெண் கைது செய்யப்பட்டு, மே 8ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
எத்தோமிடேட் (etomidate) என்பது மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவித மயக்க மருந்தாகும்.
இந்தப் பொருட்கள் கடத்தல் முயற்சி, சிங்கப்பூரில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய எத்தோமிடேட் (etomidate) வேப் பறிமுதல் சம்பவமாக கருதப்படுகிறது.



