
பேங்காங், ஜூன்-12-மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா (Bajrakitiyabha) நேற்றிரவு காலமானார்.
இளவரசி பஜ்ரகிதியாபா,( Bajrakitiyabha) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது செல்ல நாயுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்றார்.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தொற்று, பெருங்குடல் அழற்சி , குறைந்த இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீர்குலைவு , இரத்த உறைதல் பிரச்சனைகள் காரணமாக மோசமான உடல்நிலையே அவரது மரணத்திற்குக் காரணம் என அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தாய்லாந்து அரசாங்கம் தேசிய துக்க காலத்தை அறிவிக்கும் என்றும் கூறப்பட்டது.
இளவரசியின் மறைவால் , தாய்லாந்து அரச குடும்பம் அதன் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரை இழந்துள்ளது.
47 வயதான இளவரசி பஜ்ரகிதியாபா, மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளாவார்.
இவர், மன்னரின் முதல் மனைவியும் அவரது உறவினருமான இளவரசி சோம்சாவலிக்கு 1978 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி பிறந்தார்.



